வியாழன், 16 டிசம்பர், 2010

எனது பயணம் மூலம் இந்தியா-சீனா நட்பு பலப்படும்; சீன பிரதமர் வென்ஜியாபோ பேட்டி

எனது பயணம் மூலம்
 
 இந்தியா-சீனா
 
 நட்பு பலப்படும்;
 
 சீன பிரதமர் வென்ஜியாபோ பேட்டி
சீனா பிரதமர் வென்ஜியாபோ 3 நாட்கள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.  

ஜனாதிபதி மாளிகையில் சீன பிரதமருக்கு இன்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகைக்கு வந்த வென்ஜியாபோவை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் வரவேற்றனர்.

பின்னர் அவர் பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் சீன பிரதமர் வெண்ஜியாபோ நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது இந்திய பயணம் மூலம் இந்தியா-சீனா இடையேயான நடப்புறவு எதிர் காலத்தில் பலப்படுத்துவதாகவும், ஆழப்படுத்துவதாகவும் அமையும் முக்கிய பிரச்சினைகளில் இருநாடுகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படும்.

பொதுவான பிரச்சினைகளில் பிரதமர் மன்மோகன்சிங்கும் நானும் இணைந்து ஒரு மித்த முடிவை எடுப்போம் என்று நம்பிக்கை இருக்கிறது. பல்வேறு பிரச்சினைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படும்.

எங்கள் அருகாமையில் உள்ள சிறந்த நாடு இந்தியாவாகும். இரு நாடுகள் இடையே பராம்பரிய நட்புணர்வு இருக்கிறது. புதிய நூற்றாண்டில் நாம் நுழைந்துள்ளோம். இதில் இரு நாடுகள் இடையே நட்பு முறையிலான அமைதி, பரஸ்பர ஒத்துழைப்பு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சீன பிரதமர் வென்ஜியாபோவை வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்து பேசினார்.

இருநாடு வெளியுறவு துறை மந்திரிகள் இடையே தாமதமான அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் வென்ஜி யாபோ கூறினார்.
 

கருத்துகள் இல்லை: