வெள்ளி, 17 டிசம்பர், 2010

விக்கிலீக் வெளியிட்ட தகவல் : பாக். தீவிரவாதிகளை விட இந்து அமைப்புகளால் ஆபத்து; ராகுல்காந்தி கருத்து!

விக்கிலீக் வெளியிட்ட தகவல் :
 
 பாக். தீவிரவாதிகளை விட 
 
 இந்து அமைப்புகளால் ஆபத்து;
 
 ராகுல்காந்தி கருத்து
சமீபத்தில் வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க தூதரகங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிய 2 1/2 லட்சம் ரகசியங்களை “விக்கி லீக்” வெளியிட்டது. இதில் 5087 ரகசியங்கள் இந்திய தொடர்பானவை. அவற் றில் 3,038 ரகசியங்கள் டெல்லி தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்டு இருந்தன.
 
இந்த ரகசியங்கள் ஒவ் வொன்றாக இப்போது வெளிவந்து கொண்டிருக் கின்றன. அதில் ராகுல்காந்தி பற்றி அமெரிக்க தூதர் திமோதி ரோமர் அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ள ரகசியம் வெளிவந்துள்ளது. அதில் ராகுல்காந்தி தன்னிடம் பேசிய சில விவரங்களை திமோதி ரோமர் குறிப்பிட்டு உள்ளார்.
 
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி இந்தியா வந்தி ருந்தார். அவருக்கு பிரதமர் மன்மோகன்சிங் தனது வீட்டில் மதிய விருந்து அளித்தார். இதில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அமெரிக்க தூதர் திமோதி ரோமரும் வந்திருந்தார். அப்போது இருவரும் தனியாக பேசி இருக்கின்றனர்.
 
அதில் ராகுல்காந்தி சொல்லிய விஷயங்களை திமோதி ரோமர் அமெரிக்காவுக்கு அனுப்பி உள்ளார். ராகுல் காந்தியிடம் திமோதி ரோமர் இந்தியா வில் பாகிஸ்தானின் லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதிகள் நடவடிக்கைகள் குறித்து கேட்டு இருக்கிறார். அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி “லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகளுக்கு சில அடிப்படை வாத முஸ்லிம் சமுதாயத்தினர் ஆதரவாக செயல்படுகின்றனர்.

ஆனால் இப்போது இந்திய பாது காப்புக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளை விட சில அடிப்படைவாத இந்து அமைப்புகளால் தான் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. அவர்கள் மத கலவரங்களை ஏற்படுத்தி முஸ்லிம்களிடம் அரசியல் ரீதியான மோதல் போக்கை உருவாக்குகின்றனர்” என்று கூறி இருக்கிறார்.
 
குஜராத் முதல்- மந்திரி நரேந்திர மோடி போன்ற பாரதீய ஜனதா தலைவர் களாலும் இது போன்ற மோதல் போக்கு ஏற்படுத்தப்படுகிறது என்றும் ராகுல்காந்தி கூறி இருக்கிறார். பாகிஸ்தானில் இருந்தும், இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்தும் வரும் தீவிரவாத தாக்குதல்கள் கவலைத் தரக் தக்க வகையில் உள்ளது. இதை கடுமையாக ஒடுக்க வேண் டியது உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
ராகுல்காந்தி, சிவசேனா பற்றியும் திமோதி ரோமரிடம் கருத்து கூறியுள்ளார். சிவசேனா ஒரு வெறி பிடித்த அமைப்பு. மூடநம்பிக் கையிலும், குறுகிய மனப்பான்மையிலும் செயல் படுகிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 
சிவசேனா மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல்காந்தி மும் பையில் சுற்றுப் பயணம் செய்ததையும் தைரியமாக செயல் பட்டதையும் திமோதி ரோமர் தனது தகவலில் குறிப்பிட்டு உள்ளார். திமோதி ரோமரிடம் ராகுல்காந்தி இந்திய அரசியல் நிலவரங்கள் பற்றியும் பேசி யுள்ளார். மத்திய அரசு பல் வேறு சவால்களை எதிர் கொண்டு வருவதாகவும், பாராளுமன்றத்தில் இளை ஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார். சமீபத் தில் நடந்த பாராளு மன்ற தேர்தலில் தேர்ந்தெடுக் கப்பட்ட 60 புதிய உறுப்பி னர்களில் 45 பேர் இளைஞர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
ராகுல்காந்தி இந்து அமைப்புகளை விமர்சித்து இருப்பது பற்றிய ரகசியம் வெளியானதை அடுத்து பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் தருண் விஜய் இது பற்றி கூறும் போது, “காங்கிரஸ் மதமோதல்களை உருவாக்கி வருகிறது தேர்தலில் ஒட்டு அறு வடை செய்ய முயற்சிக்கிறது. ஊழலிலும், விலைவாசி உயர்வு பிரச்சினையிலும் சிக்கியுள்ள காங்கிரஸ் தேர்தல் தோல்விக்கு பயந்து இந்த மாதிரி கருத்துக்களை கூறியுள்ளது என்றார்.
 
பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறும் போது ராகுல் காந்தி கருத்து பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வும், அவர்களுடைய பிரசாரங்களுக்கு ஆதரவாக வும் இருப்பது போல உள்ளது. அவர் பொறுப்பற்ற தனமாக நடந்துள்ளார். தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா போராடுவதையே கொச்சை படுத்தி இருக்கிறார் என்றார்.
 
காங்கிரஸ் செய்தி தொடர் பாளர் ஜனார்த்தன் திவேதி கூறும் போது “இந்த தகவல் வெளியாகி இருப்பதில் ஏதோ சதி உள்நோக்கம் இருக்கிறது. இதில் உள்ள உண்மை நிலையை தெரிந்து கொண்ட பின்னர் தான் வேறு விவரங் களை கூற முடியும்” என்றார்.

கருத்துகள் இல்லை: