திங்கள், 7 மார்ச், 2011

காங்கிரசிடம் இருந்து அழைப்பு வரவில்லை : கலைஞர்

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகள் எவை என்பது குறித்து திமுக பொருளாளரும், திமுக தொகுதி பங்கீட்டுக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஐவர் குழுவுடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் திமுக தரப்பில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஆர்க்காடு வீராசாமி, பொன்முடி, டி.ஆர்.பாலுவும், பாமக தரப்பில் அக்கடசியின் தலைவர் ஜி.கே.மணி, வேலு, ஏ.கே.மூர்த்தி, வேல்முருகன், தமிழரசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.

சென்னை அறிவாலயத்தில் நடந்த ஆலோசனைக்குப்பின் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர்,   ‘’காங்கிரஸ் கட்சியில் இருந்து இந்த நிமிடம் வரை அழைப்பு வரவில்லை.   திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் சேருவது பற்றி இரண்டொரு நாளில் தெரியும்’’ என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: