முதல் அமைச்சர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை (06.03.2011) இரவு சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கேள்வி: தி.மு.க. எத்தனை இடங்களில் போட்டியிடும்?
கேள்வி: காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவதாக, நீங்கள் முடிவை அறிவித்து 24 மணி நேரம் ஆகிறது. காங்கிரஸ் தரப்பில் இருந்து யாராவது பேசினார்களா?
பதில்: இல்லை. இல்லை.
கேள்வி: தி.மு.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளதா?
பதில்: மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்பு இருக்கிறது. எந்தெந்த கட்சியினர் வருவார்கள் என்பது இன்று அல்லது நாளை தெரியும்.
பதில்: தி.மு.க. எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது பத்திரிகையில் வெளிவரும்.
கேள்வி: தி.மு.க. காங்கிரஸ் உறவு முறிவதற்கு 3 சீட்டுதான் காரணமா?
பதில்: அதுவும் ஒரு காரணம்.
இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி பதில் அளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக