செவ்வாய், 1 மார்ச், 2011

வடகொரியாவை மிரட்ட அமெரிக்கா- தென்கொரியா கூட்டு போர் ஒத்திகை

தென்கொரியா எல்லையில் உள்ள பியாங்யாஸ் தீவு மீது வடகொரியா ராணுவம் கடந்த நவம்பர் மாதம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு தென்கொரியாவும், பதில் தாக்குதல் நடத்தியது.
 
இதை தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் பதட்டம் நிலவியது. இந்த நிலையில் தென்கொரியாவுக்கு அதன் நட்பு நாடான அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. அமெரிக்க போர்க்கப்பல் தென் கொரியாவில் நிலை நிறுத்தப்பட்டது.   மேலும் அமெரிக்க ராணுவவீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து தென்கொரியா எல்லைப் பகுதியில் அமெரிக்கா, தென்கொரியா, நாட்டு படையினரின் கூட்டு போர் ஒத்திகை நடத்தப்பட்டது.
 
இதற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து போர் ஒத்திகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இருந்தாலும் வடகொரியா மற்றும் தென் கொரியாவுக்கு இடையேயான பிரச்சினை நீறுபூத்த நெருப்பு போன்று இருந்து வருகிறது.
 
இந்த நிலையில் அமெரிக்காவும், தென்கொரியாவும் மீண்டும் போர் ஒத்திகையை வடகொரியா எல்லையில் உள்ள ஜிம்போ என்ற இடத்தில் நடத்தி வருகிறது. இது சியோலில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. போர் ஒத்திகையில் ராணுவம், கப்பற்படை, விமானப்படையினர் என அனைத்து தரப்பினரும் ஈடுபட்டனர். இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  
 
இந்த நடவடிக்கைக்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் தங்களின் பாதுகாப்புக் காகவும், ராணுவ வீரர் களின் பயிற்சிக்காகவும் அமெரிக் காவுடன் போர் ஒத்திகை நடப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. ஆனால் இதை வடகொரியா மறுத்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
அவ்வாறு போர் நடந்தால் அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தபடலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: