செவ்வாய், 1 மார்ச், 2011

கோத்ரா வழக்கு - 11 பேருக்குத் தூக்கு


அகமதாபாத் : கோத்ரா வழக்கின் மீதான விசாரணையில் குற்றவாளிகள் என தீர்ப்புக் கூறப்பட்டவர்களில் 11 பேருக்குத் தூக்குத்தண்டனை விதித்து குஜராத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
2002 - ஆம் ஆண்டு, உ.பி. மாநிலம் அயோத்தியிலிருந்து சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கரசேவர்கள் குஜராத்துக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த ரயில் கோத்ரா ரயில் நிலையத்தில் வந்து நின்றபோது திடீரென அதில் இருந்த S-6 பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இதில் அப்பெட்டியிலிருந்த 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் 94 பேர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில், 31 பேர் குற்றவாளிகள் என கடந்த 22 - ஆம் தேதி குஜராத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் 31 பேர் மீதான தண்டனை விவரத்தை நீதிபதி ஆர்.ஆர்.படேல் இன்று அறிவித்தார். அதன்படி 31 பேரில் 11 பேருக்குத் தூக்குத் தண்டனையும், மற்ற 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சதித் திட்டம் தீட்டியது, அதை நிறைவேற்றியது, ரயிலை எரித்தது ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: