"தஞ்சை மாவட்ட மகளிர் திட்டம் மூலம் பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் ஊரக பகுதிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் அரசு மானியத்துடன் கூடிய கடன் நடப்பாண்டு வழங்கப்படும்' என, கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தனிநபர் பொருளாதார கடன் திட்டத்தின் கீழ் 192 பயனாளிகக்கு மட்டும் கடன் வழங்க தஞ்சை மாவட்டத்துக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுளளது. எனவே, விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலித்து கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடன் பெற பயனாளி ஊரக பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும். பயனாளிக்கு அரசு மான்யத்தொகை 12 ஆயிரம் ரூபாய் வங்கி கடன் வழங்கப்படும்.
பயனாளியின் வயது வரம்பு 45க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் படிவம் மூன்றில் வங்கி மேலாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரின் பரிந்துரை பெற்று அனுப்ப வேண்டும்.
பயனாளி மாற்றுத்திறனாளியாக இருப்பின் அடையாள அட்டையின் நகல் விண்ணப்பத்தில் வைக்கப்பட வேண்டும். பயனாளி விதவையாக இருப்பின் தாசில்தாரிடம் பெறப்பட்ட விதவை சான்றிதழுக்கான நகல் விண்ணப்பத்தில் வைக்கப்பட வேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் 24 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன், ரேஷன் கார்டு, பயனாளியின் ஃபோட்டோ கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். கடன் பெற தேவையான அனைத்து விபரங்களுடன் விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வரும் ஜுலை 30ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக