செவ்வாய், 21 பிப்ரவரி, 2012
திருச்சி மத்திய சிறையில் வார்டனிடம் தகராறு செய்ததாகக்கூறி தி.மு.க. மாவட்ட செயலர் பூண்டி கலைவாணன், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணனை காவல்துறை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவையும் கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகிறது.
கலைவாணைத் தொடர்ந்து கே.என்.நேருவையும் கைதுசெய்ய திட்டமிட்டிருப்பதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக