குஜராத் மாநிலத்தில் ஷொராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் அந்த மாநில உள்துறை முன்னாள் மந்திரி அமித் ஷா பதவி இழந்தார்.
போலீசாரால் கைது செய்யப்பட்டு 3 மாதமாக சிறையில் இருந்த அவருக்கு, குஜராத் ஐகோர்ட்டு 2 நாட்களுக்கு முன்னர் ஜாமீன் வழங்கியது.
ஆனால், இந்த ஜாமீனை ரத்து செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது. நீதிபதிகள் அப்தாப் ஆலம், ஆர்.எம்.லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது.
வருகிற 15-ந் தேதி வரை அமித் ஷா குஜராத் மாநிலத்தை விட்டு வெளியே தங்கி இருக்கும் படியும், அவரது ஜாமீன் மனுவை எதிர்த்து சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள மனுவுக்கு 12-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும் படியும் அமித் ஷாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கு விசாரணையை 15-ந் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அதற்குள் அமித் ஷாவின் பதில் மனுவுக்கு சி.பி.ஐ. பதில் அளிக்கும்படியும் உத்தரவிட்டனர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக