மும்பை: மும்பையில் வீட்டு வசதி திட்டத்தில் நடந்த முறைகேடு குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், மராட்டிய முதல்வர் அசோக் சவான் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் சனிக்கிழமை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.
மும்பையில் கார்கில் போர் வீரர்களுக்கு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அசோக் சவானின் மாமியார் உள்பட 3 உறவினர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், ராணுவ தளபதிகள் ஆகியோருக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது.
இந்நிலையில், தில்லியில் இன்று சோனியாவை நேரில் சந்தித்து சவான் விளக்கம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த விவகாரத்தில் நான் ராஜிநாமா செய்யத் தயாராக உள்ளேன் என்று சோனியாவிடம் தெரிவித்தேன்." என்றார்.
சோனியாவிடம் தனது ராஜிநாமா கடிதத்தை சவாண் அளித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே, மும்பை வீட்டு வசதி திட்ட முறைகேடு தொடர்பாக தனக்கு அறிக்கை தரும்படி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி , பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோரிடம் சோனியா கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக