வாஷிங்டன்: அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் தெற்கு பிளாக் பகுதியில் ஒரு மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 45 நிமிடம் நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பாதுகாப்புப்படை வீர்ர்கள் காயமடைந்துள்ளனர். ஆனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனையடுத்து துப்பாக்கி்ச்சூடு நடத்தியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக