மாற்றுக் கல்விகளை வழங்குவதன் மூலம் அமெரிக்காவில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவி செய்ய இந்தியாவால் இயலும் என்று தேசிய அறிவுசார் ஆணையத்தின் தலைவர் சாம் பிட்ரோ கூறியுள்ளார்.
இந்திய நுட்பவியல் கழக முன்னாள் மாணவர் சங்க விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சாம் பிட்ரோடா, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கியப் பிரச்சனையாக உள்ளது. புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டுமெனில், மாற்றுக் கல்விகளின் மூலம் மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அமெரிக்கர்களுக்கு இந்தியா இத்தகைய பயிற்சிகளை அளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையின் போது, இரு நாடுகளுக்கிடையிலான வணிக உறவே முக்கியமாக அலசப்படும் என்றும் சாம் கூறினார்.
ஒபாமாவின் இந்திய வருகை நல்ல வாய்ப்பு. அவரது வருகையை ஒட்டி இரு தரப்பிலும் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இரு நாட்டு உறவுகளை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன் என்றும் சாம் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக