பீகாரின் வளர்ச்சித் திட்டங்களில் ஊழலி மலிந்துள்ளதாகக் கூறிய சோனியா காந்திக்குப் பதில் அளிக்கும் விதமாகப் பேசிய பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஊழலின் தாய் காங்கிரஸ் கட்சிதான் என்று கூறினார்.
பாட்னாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் பேசிய நிதீஷ் குமார், ஊழலை உருவாக்கியதே காங்கிரஸ் கட்சிதான். அந்தக் கட்சிதான் ஊழலின் தாய். பீகாரில் ஊழல் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள். ஸ்பெக்ட்ரம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற ஊழல் குறித்து என்ன சொல்வீர்கள் என்று பேசினார்.
நிதீஷ் குமாரின் பேச்சை ஆமோதித்துப் பேசிய சுஷ்மா, காமன் வெல்த் வியைாட்டுப் போட்டி நடத்துவதில் நடைபெற்ற ஊழல் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி குரல் எழுப்பும் என்று பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக