குஜராத் முஸ்லிம் இன சுத்திகரிப்பு படுகொலையை நடத்திய மோடிக்கு அமெரிக்கா உள்ளிட்ட சில அயல்நாடுகளில் விசிட் விசா மறுக்கப்பட்டது. இதனால் பெருத்த அவமானம் அடைந்த மோடிக்கு, அடுத்த அவமானமாக பீகாரில் இவர் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கெடுக்கக் கூடாது என பிகாரில் பாரதீய ஜனதாக் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு கண்டுள்ள நிதிஷ்குமார் கட்சியின் தடை அமைந்தது. அதிலிருந்து மோடி மீண்டுவருவதற்குள் மேலும் ஒரு அவமானம் அவரது கட்சி முக்கியத் தலைவர் வாயிலாகவே கிடைத்துள்ளது மோடியை நிச்சயம் 'அப்செட்' ஆக்கியிருக்கும்.
நடைபெறும் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் பிரசாரத்துக்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் சென்றிருந்தபோது, பிரசாரத்துக்கு மோடி வரவில்லையா என்று நிருபர்கள் கேட்டபோது,
மோடி வித்தையெல்லாம் எல்லா மாநிலங்களிலும் எடுபடும் என்று கூற முடியாது என்று பதில் அளித்ததாக செய்திகள் கூறுகின்றன.
குஜராத் முஸ்லிம் இன சுத்திகரிப்பு படுகொலையை நடத்திய மோடி, அங்கு மீண்டும் முதல்வரானதும், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் கணிசமான வெற்றியை பெற்றுள்ளதையும் வைத்து மோடியை மக்கள் செல்வாக்கு மிக்கவராக காட்ட சிலர் முனைகின்றனர்.
ஆனால் மோடியின் தொடர் வெற்றி, பிரதான கட்சியான காங்கிரசின் மிதவாத மதவாதமும், அரசியல் அணுகுமுறையும்தான் காரணம் என்பதுதான் உண்மை. எதிர்கட்சி தெளிவான அரசியல் செய்யாத நிலையில், அதிகாரத்தை கையில் வைத்துள்ள மோடி, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவது பெரிய வித்தையல்ல. ஆனாலும் மோடியின் இந்த மோடி வித்தை எல்லா இடங்களிலும் எடுபடாது என அவரது கட்சியை சேர்ந்த பிரதான தலைவரும், நாடளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளதன் மூலம், மோடியின் மக்கள் செல்வாக்கு என்பது ஒரு வித்தையன்றி உண்மையல்ல என்பது திண்ணம். அதோடு பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 'சோ' வகையறாக்களால் புகழப்படும் இவருக்கு ஏற்படும் அடுத்தடுத்த அவமானங்கள் அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக