செவ்வாய், 26 அக்டோபர், 2010

ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்!



பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி தற்போது தனி நபர் தாக்குதலாக மாறி உள்ளது. தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஐக்கிய ஜனதா தளத் தலைவர் ஷரத் யாதவ், ராகுல் காந்தியை கங்கையில் தூக்கி வீச வேண்டும் என்று கூறினார்.

(காங்கிரஸ் கட்சியின்) கை சின்னத்துடன் வரும் இவர்கள் 50 ஆண்டுகாலம் இந்த நாட்டை ஆட்சி செய்துள்ளனர்.

மோதிலால், ஜவஹர்லால், இந்திரா காந்தி, சோனியா காந்தி மற்றும் தற்போது ராகுல் காந்தி. இப்பொழுது புதிதாக ஒரு குழந்தை வந்துள்ளது. (ராகுல் காந்தி பொதுக் கூட்டங்களில் பேசும்போது தன்னுடைய சட்டையை இழுத்துவிடுவது போல் செய்து காண்பித்து) அது இப்படிச் செய்யும்.

உனக்கு என்ன தெரியும்? சிலர் காகிதத்தில் எழுதிக் கொடுப்பதை அப்படியே நீ வாசிக்கிறாய். உன்னையெல்லாம் தூக்கி கங்கை நதியில் வீச வேண்டும். ஆனால் மக்கள் நோயாளியாக இருக்கிறார்கள். இது இந்த நாட்டின் துரதிருஷ்டம் என்று ஷரத் யாதவ் கூறினார்.

கருத்துகள் இல்லை: