புதன், 20 அக்டோபர், 2010

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

எனது தலைமையில் 18.10.2010 அன்று மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து, கூட்டம் நடந்த நாள் வரை எனக்கு பல்வேறு கொலை மிரட்டல் கடிதங்கள் விடுக்கப்பட்டன.

இது மட்டுமல்லாமல், ஜெயலலிதாவின் கூட்டமும் குண்டு வைத்து கொல்லப்படும் என்ற மிரட்டல் கடிதங்கள் வந்தன. மேற்படி கூட்டத்தில் நான் கலந்து கொள்ளக் கூடாது; அப்படியே நான் கலந்து கொண்டாலும், என்னுடைய கூட்டத்திற்கு கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் வரக்கூடாது என்ற எண்ணத்தோடு இத் தகைய கொலை மிரட்டல் கடி தங்கள் விடப்பட்டன.

கருணாநிதியும், மதுரையிலே அவர்களின் கூட்டம் நடந்து முடிகிற வரையில், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டுகிற அகிம்சாவாதியாக இருக்க வேண்டும்... என்று தன் பங்கிற்கு அறிக்கை விடுத்து இருந்தார்.

18-ந்தேதி போக்குவரத்தை வரைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, மதுரையில் உள்ள அனைத்து சாலைகளிலும் வாகனங்களை குறுக்கே நிறுத்தி போக்கு வரத்திற்கு குந்தகம் விளை விக்கும் செயல்களில் காவல் துறையினர் ஈடுபட்டனர். மதுரை விமான நிலையத் திலிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரை உள்ள 16 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு எனக்கே 2 1/2 மணி நேரம் தேவைப்பட்டது. அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல்.

ஏற்கனவே, எட்டு லட்சம் பேர் கோவையில் கூடியபோது, 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பும், பதினெட்டு லட்சம் பேர் திருச்சியில் கூடிய போது 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பும் வாகனங்களை காவல் துறை தடுத்து நிறுத்தியது. மதுரையில் லட்சக்கணக்கில் திரண்டு வந்துதம் பலத்தை உலகிற்கு காட்டவேண்டும் என்ற வைராக்கியத்துடன், லட்சிய உணர்வுடன் ஏற்பாடு செய்து வருவதை உளவுத் துறை அறிந்து இதன் அடிப்படையில், மிகப் பெரிய அளவில் மக்கள் கூட்டம் மதுரையில் சேருவதை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள்.

எக்காரணத்தை முன்னிட்டும், கோவை, திருச்சியில் நடந்ததைப் போல மதுரையில் பெருமளவு கூட்டம் சேருவதை அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவு போட்டதால், அந்த நிமிடத்திலிருந்தே மதுரையில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவுகளின் பேரில் மதுரை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன் வந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான கழக உடன் பிறப்புகளின் வாகனங்கள் மதுரையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன.

அக்டோபர் 18-ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானங்களிலும், வேறு இடங்களிலிருந்து மதுரைக்கு வந்த விமானங்களிலும் பயணம் செய்த பயணிகள் விமானத்தில் இருந்தே தேனியை சுற்றியும், வாடிப்பட்டியை சுற்றியும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதை பார்த்து இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக மதுரை கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த 50 லட்சம் மக்களில், திடலில் திரண்டு இருந்த 25 விழுக்காடு மக்களைத்தான் ஊடகங்களாலும், அனைவராலும் பார்க்க முடிந்தது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து புறப்பட்டு வந்த 75 விழுக்காடு கழக உடன்பிறப்புகளும், பொது மக்களும் மதுரையை வந்து அடையவும் முடிய வில்லை; அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவும் முடிய வில்லை.

18-ஆம் தேதி அன்று மதுரையில் உள்ள உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளை திறக்கக்கூடாது என அதன் உரிமையாளர்களுக்கும்; கடைகளை திறக்கக் கூடாது என வியாபாரிகளுக்கும் காவல் துறை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, காசு கொடுத்தாலும் உணவும், தேநீரும், தண்ணீரும் கூட கிடைக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. 18.10.2010 அன்று மதுரைக்கு வந்திருந்த 50 லட்சத்திற்கும் மேற்பட்ட கழக உடன்பிறப்புகளும், பொது மக்களும், பசியுடனும், தாகத்துடனும்தான் நாள் முழுவதும் தவித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ககூடாது என கழக உடன் பிறப்புகளையும், பொது மக்களையும் தி.மு.க.வினர் மிரட்டியுள்ளனர்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலும், எனது ஆட்சிக் காலத்திலும் கருணாநிதி எத்தனையோ பொதுக் கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தியிருக்கிறார். அப்பொழுதெல்லாம் இது போன்ற தடைகள், இடையூறுகள் எங்க ளால் ஏற்படுத்தப்படவில்லை. இந்த ஜனநாயக விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமக்கு வந்த மக்கள் கூட்டத்தை முழு அளவில் அங்கே, மதுரையில் சேரவிட்டு இருந் தால், இதுவரை உலகமே கண்டிராத ஒரு மகத்தான மக்கள் சமுத்திரத்தை அங்கே கண்டிருக்க முடியும். என்னைப் பார்க்க வேண் டும், என்னுடைய பேச்சைக் கேட்க வேண்டும் என்பதற்காக துணிச்சலுடன் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளி லிருந்து வந்த லட்சக்கணக்கானவர்களுக்கும்;

போக்குவரத்து முறைப்படுத்தப்படாததன் காரணமாகவும், வேண்டுமென்றே தடுத்து நிறுத்தப்பட்டதன் காரணமாகவும், நெரி சல் ஏற்பட்டு, கூட்ட மேடை அருகே வர முடியாமல், பல மைல்கள் தொலைவிலேயே நிறுத்தப்பட்டு என்னை காண முடியாமல், என் உரையை கேட்க முடியாமல் போன லட்சோப லட்ச கழக உடன்பிறப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுதல்களையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: