ஞாயிறு, 7 நவம்பர், 2010

ஒபாமா முன்னிலையில் ஒப்பந்தம்: 50 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்காவில் வேலை

ஒபாமா முன்னிலையில் ஒப்பந்தம்:  50 ஆயிரம் இந்தியர்களுக்கு
 
 அமெரிக்காவில் வேலை
மும்பை, நவ. 7-
 
மும்பை வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று அமெரிக்கா- இந்தியா தொழில் அதிபர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். டிரிடன் ஓட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இருநாட்டு தொழில் அதிபர்களும் தொழில்கள் தொடர்பாக 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
 
ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி, அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக்கல் நிறுவனத்துடன் ரூ.10 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். இதுபோல பல்வேறு தொழில் அதிபர்களும் ஒபாமா முன்னிலையில் ஒப்பந்தம் செய்தனர்.
 
மொத்தம் ரூ.50 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் 50 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்காவில் புதிதாக வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
மாநாட்டில் ஒபாமா பேசியதாவது:-
 
இங்கு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் மூலம் கலிபோர்னியாவிலும், ஓகிபோவிலும் உயர் தொழில் நுட்பம் படித்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும்.
 
கால்சென்டர் பணிகளில் இந்தியா முக்கிய இடத்தை பிடிக்கிறது. உலக தாராள மயத்தால் பல வேலைகள் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றன. வர்த்தகம் என்பது ஒரு வழிபாதை அல்ல இரு தரப்பிலும் அதன் மூலம் பயன் அடையவேண்டும்.
 
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சிறப்பான பொருளாதார உறவு உள்ளது. இந்தியாவில் 2 சதவீத ஏற்றுமதி அமெரிக்காவுக்கு வருகிறது. இந்தியாவின் இறக்குமதியில் 10 சதவீதம் அமெரிக்காவில் இருந்து வருகிறது. அமெரிக்காவின் 12-வது பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா இருக்கிறது.
 
தொடர்ந்து இதில் முன்னேற்றம் நிலவுகிறது.
 
இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை: