டெல்லி: சோராபுதீனை போலி என்கெளன்டர் மூலம் கொன்றவர்களுடன் 50க்கும் மேற்பட்ட முறை போனில் பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் அமீத் ஷா என்று சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சோராபுதீன் ஷேக்கை போலியான என்கெளன்டர் மூலமும், அவரது மனைவி கெளசர் பீயை, கற்பழித்து சித்திரவதை செய்து பின்னர் விஷ ஊசி போட்டுக்கொலை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சில முக்கிய போலீஸ் அதிகாரிகள் கைதாகியுள்ளனர். உச்சகட்டமாக முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் அமீத்ஷா கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சோராபுதீன் வழக்கின் நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் நேற்று சிபிஐ தாக்கல் செய்தது.
மூடி சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கையை நீதிபதிகள் அப்தாப் ஆலம், லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்சிடம் சிபிஐ ஒப்படைத்தது.
இதுகுறித்து சிபிஐ மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்சி கூறுகையில், நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளோம் என்றார்.
அந்த அறிக்கையில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இருப்பினும் கொலையை நடத்திய குற்றவாளிகளுடன் 50க்கும் மேற்பட்ட தடவை அமீத் ஷே பேசிய விவரத்தை சிபிஐ தனது அறிக்கையில் இணைத்துள்ளதாக கூறப்புகிறது.
அமீத் ஷா தற்போது ஜாமீனில் விடுதலையாகி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி குஜராத்தை விட்டு வெளியேறி மும்பையில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக