வெள்ளி, 12 நவம்பர், 2010

நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை-ராஜா உறுதி

Rajaடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் டிராய் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே நடைபெற்றது. எனவே இதுதொடர்பாக நான் பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நாட்டுக்கு 1 லட்சத்து 73 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர் ராஜாவே காரணம் என மத்திய கணக்குதணிக்கை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சர்ச்சை பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் ராஜா இதுகுறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், தற்போது இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. எனவே நான் கருத்து கூற முடியாது. அனைத்தையும் நாங்கள் கோர்ட்டில் நிரூபிப்போம்.

1999ம் ஆண்டு வகுக்கப்பட்ட புதிய தொலைத் தொடர்பு கொள்கையைத்தான் நாங்கள் கடைப்பிடித்தோம். மேலும் டிராய் வகுத்துக் கொடுத்த பரிந்துரைகளைத்தான் நாங்கள் பின்பற்றினோம். எனவே நான் பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை என்றார் ராஜா.

கருத்துகள் இல்லை: