டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 9ம் தேதி துவங்குகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் நீதிபதிகள் சொத்துக் கணக்கை சமர்பிக்க வழிவகை செய்யும் மசோதா, உணவு பாதுகாப்பு மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
மேலும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறுகிறது. அதில் அமெரிக்க அதிபர் ஒபாமா உரையாற்றுகிறார். மறுநாள் 9ம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் துவங்குகிறது.
இக்கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவிருக்கும் முக்கிய மசோதாக்கள் பற்றி இன்று மாலை அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவிக்கிறார்.
இந்தக் கூட்டத் தொடரில் காமன்வெல்த் போட்டி ஊழல் விவகாரம், மும்பையில் கார்கில் போர் வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் நடந்த முறைகேடுகள், ஆதர்ஷ் குடியிருப்பு விவகாரம், காஷ்மீர் விவகாரம், விலைவாசி உயர்வு ஆகிய பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பவுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக