பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் தேசவிரோதமாகப் பேசியதாகக் கூறப்படுவதற்கு அவர் மீது டில்லி காவல் துறை நடவடிக்கை எடுக்காதது சட்டத்திற்குட்பட்டதுதான் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்திற்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று அண்மையில் டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கூட ஒரு நடவடிக்கைதான் என்று பதில் அளித்தார்.
ஐபிசி 124ஏ பிரிவில் நேரடியாக ஒரு வன்முறையைத் தூண்டும் வகையில் பேசாத வரை, அவர்கள் மீது சகிப்புத் தன்மையைக் காட்டி நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே டில்லி காவல்துறையினர் அருந்ததி ராய் மீது சட்டத்திற்குட்பட்டே நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ப.சிதம்பரம் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக