ஞாயிறு, 7 நவம்பர், 2010

ஹெலன் டேவிட்சனுக்கு எதிராகப் போராட்டம் - த.மு.மு.க.வினர் கைது!

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த ஹெலன் டேவிட்சனுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய த.மு.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி விசுவ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த ஹெலன்டேவிட்சன் கையெழுத்திட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக அவரிடம் திமுக தலைமை விளக்கம் கேட்டது. ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி தாம் கையெழுத்திடவில்லை என்றும் தம்மிடம் அளிக்கப்பட்ட மனுவிற்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டதாகவும் டேவிட்சன் கூறினார்.

ஹெலன் டேவிட்சனிடம் மனுவில் கைöழுத்து பெறவில்லை என்று அனுமன் சக்தி அமைப்பு சார்பில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் மறுத்தார். இந்நிலையில் ஹெலன் டேவிட்சன் தனது நாடாளு மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய கோரி த.மு.மு.க. சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாநில துணைத் தலைவர் காதர்மைதீன், மாவட்ட தலைவர் பீர்முகம்மது உள்ளிட்ட நூற்றுக் கணக்கானவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை: