ஞாயிறு, 7 நவம்பர், 2010

ராமதாஸ் தம்பி மகன் ப.சிதம்பரம் முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார்

ராமதாஸ் தம்பி மகன்
 
 ப.சிதம்பரம் முன்னிலையில்
 
 காங்கிரசில் சேர்ந்தார்
சென்னை, நவ. 7-
 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் தம்பி மகன் எஸ்.எஸ்.சந்திரசேகரன். இவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வசித்து வருகிறார். எஸ்.எஸ்.சந்திரசேகரன் தனது ஆதரவாளர்களுடன் இன்று சத்தியமூர்த்தி பவன் வந்து மத்திய மந்திரி ப.சிதம்பரம் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவருடன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் இணைந்தனர்.
 
அப்போது ப.சிதம்பரம், சால்வை அணிவித்து அவர்களை வரவேற்றார். நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு பலர் காங்கிரசுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு உரிய மரியாதையை காங்கிரஸ் வழங்கும். பின்தங்கிய மக்களுக்கும் அதிகாரம் கிடைக்கும்.
 
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
 
நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, கே.எஸ்.அழகிரி எம்.பி., யசோதா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. வள்ளல் பெருமான், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், சிரஞ்சீவி, தாமோதரன், டி.வி.துரைராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை: