ஞாயிறு, 7 நவம்பர், 2010

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை ஜெயலலிதா அறிக்கை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை  ஜெயலலிதா அறிக்கைசென்னை, நவ.7-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாக தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார். மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களை ஒப்பிட்டு புள்ளிவிவரங்களை அளித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டிலே இதுவரை இல்லாத ஒன்றாக பெற்றோர்களே குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்கின்ற அளவுக்கு சட்டம்- ஒழுங்கு மோசம் அடைந்து உள்ளது.

கடந்த சில நாட்களில் மட்டும், கோவையில் இரண்டு இளம் பிஞ்சுகள் கடத்திக்கொலை; சென்னையில் பள்ளி மாணவன் கடத்தல்; புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த பிரமுகர் வெட்டிக் கொலை; ஆலங்குடி நகர தி.மு.க. செயலாளர் படுகொலை; சேலம், தாசநாயக்கன்பட்டியில் ஆறு பேர் படுகொலை;

கடலூரில் நடு ரோட்டில் மீனவர் வெட்டிப் படுகொலை; வத்திராயிருப்பு அருகே வெடிகுண்டு வீச்சு; முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலம் படுகொலை; பணத்திற்காக துணை நடிகை கொலை என கொலை பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சட்டம்- ஒழுங்கு பிரமாதம் என்று கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

                                                                                                                                                       

கருத்துகள் இல்லை: