சனி, 27 நவம்பர், 2010

ஆதர்ஸ் வீட்டு ஊழல் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயம்

மும்பையில் கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு 31 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டி தரப்பட்டது. இந்த ஆதர்ஸ் குடியிருப்பு கட்டுவதில் பெரும் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மாற்றப்பட்டனர்.

மேலும்  ஊழல் வழக்கில் ராணுவ உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில்  ஊழல் தொடர்பாக முக்கிய ஆவணமான பைலில் பக்கம் எண்கள் 15,27,99,279 ம் பக்கங்கள் காணவில்லை, சி.பி,ஐ, விசாரித்து வரும் இந்த வழக்கில், நகர்புறம் மேம்பாட்டு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள்  காணாமல் போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: