வியாழன், 4 நவம்பர், 2010

நல்லவர்கள் ஒன்று சேராமல் இருந்து விடக் கூடாது-விஜய்காந்த்

Vijayakanthசென்னை: தீய சக்திகள் ஒன்று சேர்கிற போது, நல்லவர்கள் ஒன்று சேராமல் இருந்து விடக் கூடாது. தீய சக்திகளை ஒழிக்க நல்லவர்கள் ஒன்று சேர்ந்து போரிட வேண்டும் என்று தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜய்காந்த்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இருளை அகற்றி, ஒளியை ஏற்றும் திருநாள் தீபாவளி நாளாகும். நியாயங்கள் மட்டுமே வெற்றி பெறுவதும் இல்லை. அநியாயங்கள் தாமே அழிந்து விடுவதும் இல்லை. அநியாயத்தை எதிர்த்து, போரிட்டு வெற்றி பெற்றால்தான் நியாயத்தை நிலை நிறுத்த முடியும்.

தீயசக்திகள் ஒன்று சேர்கின்ற போது, நல்லவர்கள் ஒன்று சேராமல் இருந்து விடக் கூடாது. தீய சக்திகளை ஒழிக்க நல்லவர்கள் ஒன்று சேர்ந்து போரிட வேண்டும். இருளை அகற்ற தீபத்தை ஏற்ற வேண்டும். புற இருளை மட்டுமல்ல, அக இருளையும் இந்த நன்னாளில் அகற்ற வேண்டும். அதுவே தீபாவளி நமக்குத் தரும் பாடமாகும். இந்த நன்னாளில் எல்லோரும் நல்வாழ்வைப் பெற்றிட அனைவருக்கும் என் இதயமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

சரத்குமார்:

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒரு கட்டுப்பாடான சமுதாயம் அமையும் போது தான் பண்டிகைகள் ஏற்படுத்தும் உற்சாகத்தையும் ஒருமைப் பாட்டையும் முழு உணர்வோடும், நம்பிக்கையோடும் அனுபவிக்க முடியும்.

மேலும், வறுமை இருள் அகன்று, அறியாமை இருள் அகன்று மக்கள் அனைவரும் சுபிட்சமாக நல்வாழ்வு வாழ இந்த இனிய தீப ஒளித் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சார்பிலும் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் இதயங்கனிந்த இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: