மும்பை: திருமணம் செய்து கொள்ளவதாக உறுதியளித்து விமானப் பணிப்பெண்ணை பலமுறை கற்பழித்த, ஜெட் ஏர்வேஸ் நிறுவன துணை விமானி மும்பை விமான நிலையத்தில் வைதது கைது செய்யப்பட்டார்.
வருண் அகர்வால் (27) என்ற அந்த துணை விமானியும், 22 வயதான ஜெட் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே 2009ம் ஆண்டு மே மாதம் முதல் மும்பையில் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தனர்.
அவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தொடர்ந்து உடலுறவு வைத்துள்ளார் வருண்.
உடலுறவுக்கு அந்தப் பெண் உடன்பட மறுத்தபோது அவரை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று மோதிரத்தையும் அணிவித்துள்ளார் அகர்வால். ஆனால், திருமணம் செய்ய மட்டும் தொடர்ந்து மறுத்து வந்த அகர்வால், சமீபத்தில் அவரை கைவிட்டுவிட்டார்.
மேலும் திருமணத்துக்கு வற்புறுத்திய அந்தப் பெண்ணை தாக்கி, வீட்டை விட்டும் விரட்டியுள்ளார்.
இதையடுத்து விலே பார்லே காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் செய்ததையடுத்து, நேற்று அகர்வாலை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
2006ம் ஆண்டு முதல் ஜெட் ஏர்வேசில் பணிபுரியும் அகர்வால், 2008ம் ஆண்டு பணியில் சேர்ந்த அந்தப் பணிப்பெண்ணை காதலிப்பதாகக் கூறி பின்னாலேயே சுற்றியுள்ளார்.
முதலில் அந்தக் காதலை பெண் ஏற்க மறுத்துள்ளார். ஆனால், இருவருமே உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, தொடர்ந்து வற்புறுத்தியதால் அவரது காதலை ஏற்றுள்ளார் அந்தப் பெண்.
பின்னர் மும்பை மரோல் மிலிட்டரி சாலையில் உள்ள அசோக் டவர் அபார்ட்மெண்ட்ல், உள்ள தனது வீட்டிலேயே அந்தப் பெண்ணை தங்க வைத்த அகர்வால் திருமணம் செய்வதாகக் கூறி தொடர்ந்து உடலுறவு வைத்துவிட்டு சமீபத்தில் கைகழுவியுள்ளார்.
அகர்வால் மீது கற்பழிப்பு, மோசடி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அகர்வால் மற்றும் அந்தப் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக