அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபை தேர்தல் (பாராளுமன்ற தேர்தல்) செனட் தேர்தல் மற்றும் மாகாண கவர்னர் தேர்தல் நடந்தது.
பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தன. சென்ட் சபையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 37 இடங்களுக்கும், 50 மாகாண கவர்னர்களில் 37 கவர்னர் பதவிகளுக்கும் தேர்தல் நடந்தன.
இதில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சியும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியும் போட்டியிட்டன.
பிரதிநிதிகள் சபையில் இதுவரை 344 இடங்களின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 213 இடங்களை குடியரசு கட்சி பிடித்துள்ளது. ஒபாமாவின் ஜனநாயக கட்சி 144 இடங்களை மட்டுமே பிடித்து உள்ளது.
ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பெரும்பாலான இடங்களிலும் குடியரசு கட்சியே முன்னணியில் உள்ளது. இன்னும் 5 இடங்களை பிடித்தால் குடியரசு கட்சி பிரதிநிதிகள் சபையில் மெஜாரிட்டியை பெற்று விடும்.
செனட் சபையில் குடியரசு கட்சி 23 இடங்களை பிடித்து உள்ளது. ஜனநாயக கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் செனட் சபையில் ஜனநாயக கட்சிக்கு மொத்தம் உள்ள 100 இடங்களில் 38 இடங்கள் இருந்தன. இப்போது 10 இடங்கள் பெற்று 48 இடங்களை பிடித்து உள்ளது. எனவே ஜனநாயக கட்சி வெற்றி பெற்று மெஜாரிட்டியை பெறும் நிலையில் உள்ளது.
கவர்னர் தேர்தலிலும் குடியரசு கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஜனநாயக கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி ஒபாமாவுக்கு ஏற்பட்ட தோல்வியாக கருதப்படுகிறது. அவருடைய பொருளாதார கொள்கை ஏற்கனவே விமர்சிக்கப்பட்டு வந்தன. பொருளாதார கொள்கை சரி இல்லாததால் மக்கள் அவருக்கு எதிராக ஓட்டளித்து இருப்பதாக கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக