புதன், 3 நவம்பர், 2010

விலைவாசியைக் குறைப்பது மாநில அரசுகளின் வேலை-கூறுகிறார் சோனியா!

Sonia Gandhiடெல்லி: விலைவாசியைக் குறைப்பது மாநில அரசுகளின் வேலை. இதற்கு மத்திய அரசை எதிர்ப்பார்ப்பதும், குறை சொல்வதும் நியாயமில்லை, என்றார் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி  .

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி தலைமை தாங்கினார்.

பிரதமர் மன்மோகன் சிங்  மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, "அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, நாட்டின் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்பதை உணர்ந்துள்ளோம். ஆனால் விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசை மட்டுமே எதிர்க்கட்சிகள் குறை கூறுவது நியாயமற்றது.

ஒரு சில மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கை மற்றும் வரி விதிப்பு இந்த விலை உயர்வுக்குக் காரணமாகியுள்ளது. விலைவாசி உயர்வுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பலன் அளித்து வருகிறது. முழுவதுமாக அவற்றை கட்டுப்படுத்த மேலும் காலஅவகாசம் தேவை.

மும்பை தாக்குதலுக்கு பிறகு நாட்டின் பாதுகாப்பு  அதிக்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் முழுவதுமாக நீங்கவில்லை என்பதும் உண்மையே. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துடன் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுக்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். இந்தப் பிரச்சினைகளை அரசு சரியாகக் கையாள திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன", என்றார்.

கருத்துகள் இல்லை: