வியாழன், 4 நவம்பர், 2010

தேர்தல் கூட்டணி அ.தி.மு.க. அணியில் பா.ம.க., தே.மு.தி.க. சேருமா?

தேர்தல் கூட்டணி
 
 அ.தி.மு.க. அணியில் பா.ம.க., தே.மு.தி.க. சேருமா?சட்டசபை தேர்தல் நெருங்குவதால், தமிழ்நாட்டில் கூட்டணி பற்றிய பேச்சுகளும், தீவிரம் அடைந்துள்ளன.
 
அ.தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் இருந்தன. தற்போது புதிய தமிழகம் கட்சியும் இதில் சேர்ந்துள்ளது.
 
இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்க்கும் முயற்சி நடந்து வருகிறது. இதற்கான பேச்சு வார்த்தையில் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் இறங்கி இருப்பதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. தே.மு.தி.க. கட்சிகளை சேர்த்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று ஜெயலலிதா விரும்புவதாக அந்த கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அதையடுத்து அதற்கான முயற்சிகள் தொடங்கி உள்ளன.
 
தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்த்தே ஆக வேண்டும் என்று கட்சி மேலிடம் விரும்புவதாகவும், அதற்கான பேச்சு வார்த்தைகளில் 2-வது கட்ட தலைவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இதுபோல் பா.ம.க.வுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டு கட்சிகளுக்கும் திருப்தி அளிக்கும் வகையில் “சீட்” ஒதுக்க அ.தி.மு.க. மேலிடம் தயாராக இருப்பதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய கூட்டணி பற்றிய நேரடி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்றும், அந்த கட்சிகள் கேட்கும் இடங்கள் எத்தனை என்பதும் அதற்கு முன்பு பேசி முடிவு செய்யப்படும் என்றும் அந்த கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

                                                                          

கருத்துகள் இல்லை: