சனி, 6 நவம்பர், 2010

மதுரையில் வரலாறு காணாத மழை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

மதுரையில் வரலாறு காணாத மழை: 
 
 வீடுகளுக்குள் 
 
 வெள்ளம் புகுந்தது
                                                                           
மதுரை, நவ. 6-
 
மதுரையில் நேற்று மாலை 6 மணிக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இரவு 9.15 மணி வரை இடைவிடாது மழை கொட்டியது. இதனால் நகரின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் போல மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. பெரியார் பஸ் நிலையம் முன்பு முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் 4 சக்கரம் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்றோர் மிகவும் அவதிப்பட்டனர்.

இதேபோல ரெயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங்களும் தண்ணீரில் மூழ்கியது. ரெயில்வே நிலைய நுழைவு பகுதியை கடக்க முடியாமல் பயணிகள் சிரமப்பட்டனர்.
 
இந்த வரலாறு காணாத பலத்த மழையால் 41-வது வார்டு வசந்த நகரில் உள்ள ராமலிங்க நகரில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு உள்ள 15 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
 
இரவு முழுவதும் விடியவிடிய தூங்காமல் விழித்திருந்தனர். இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் கவுன்சிலர் கலைமணியிடம் மழைநீரை வெளியேற்ற மனு கொடுத்தனர். மேலும் முக்கிய இடங்களில் மின்தடை ஏற்பட்டது. நேற்று தீபாவளி பண்டிகை என் பதால் மழை நின்ற பின்பு வெடி வெடித்து மக்கள் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடினர்.

கருத்துகள் இல்லை: