இந்து மதத் துறவிகள், தலைவர்கள் இடம்பெற்றுள்ள அறக்கட்டளை ஒன்றின் மூலம் பாபர் மசூதியை மீண்டும் கட்டிக்கொடுக்க காங்கிரஸ் கட்சி திட்டம் தீட்டியுள்ளதாக வரும் தகவல்களை அடுத்து, இம்முடிவை எதிர்த்து நவம்பர் 19ஆம் தேதி பாபர்மசூதி-ராமஜன்மபூமி பிரச்சனையின் இடமான அயோத்தியில் மாநாடு ஒன்றை நடத்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் ராம் மங்கள் தாஸ் ராமாயணி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் சுமார் 60 ஆயிரம் ராம பக்தர்கள் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
"இந்து மதத் தலைவர்களும் துறவிகளும் இடம்பெற்றுள்ளதாக கூறி அறக்கட்டளை ஒன்றின் மூலம் பாபர் மசூதியை கட்ட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், கட்டுமானப் பணியை ராகுல் மூலம் தொடங்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்." என்றும் ராம் மங்கள் தாஸ் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக