புதன், 1 டிசம்பர், 2010

நீரா ராடியா உரையாடல் - விசாரணை நடைபெறுகிறது: சிதம்பரம்!

அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் அரசியல் தரகர் நீரா ராடிய நடத்திய தொலைபேசி உரையாடல்கள் வெளியானது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் விசாரணை நடத்தி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மத்திய அரசு விசாரணைக்கான உத்தரவு எதனையும் பிறப்பிக்கவில்லை. ஆனால் நேரடி வரிகள் வாரியம் (CBDT) இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது என்று புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை அடுத்து சிலரின் தொலைபேசி உரையாடல்கள் குறிப்பிட்ட சில நாள்களில் பதிவு செய்யப்பட்டன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ தரப்பில் நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள் குறித்து  கருத்து கேட்டபோது, சுமார் 5000 தொலைபேசி அழைப்புகளை தாங்கள் ஆய்வு செய்து வருவதாகக் கூறியுள்ளனர்.

இதுவரை 104 தொலைபேசி உரையாடல்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை: