தமிழ்நாடு, மேற்கு வங்காளம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் ஏப்ரல்- மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
5 மாநிலங்களிலும் தேர்தலுக்கான எல்லா ஏற்பாடுகளையும் தலைமை தேர்தல் கமிஷன் செய்து முடித்துவிட்டது. தற்போது வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
5 மாநிலங்களுக்கும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டு விட்டன. தேர்தல் தேதி மட்டுமே அறிவிக்கப்பட வேண்டியதுள்ளது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்) காலை டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தலைமை தேர்தல் அதிகாரி குரேஷி தலைமை தாங்கினார். கூட்டத்தில் 5 மாநில தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 5 மாநிலத்தில் எப்போது தேர்தலை நடத்துவது என்ற ஆய்வும் நடந்தது.
ஏப்ரல்- மே மாதங்களில் எந்தெந்த நாட்கள் ஓட்டுப்பதிவுக்கு சாதகமாக இருக்கும் என்று ஆலோசிக்கப்பட்டது. இன்று மாலை 6 மணிக்க தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக