செவ்வாய், 1 மார்ச், 2011

தமிழக சட்டசபை தேர்தல் தேதி : ஏப்ரல்-13

தமிழகம், புதுச்சேரி,கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின்  தேர்தல் தேதியை  டெல்லியில் இன்று மாலை  தேர்தல் ஆணையர் குரேஷி அறிவித்தார்.



தமிழக சட்டசபையின் ஆயுட்காலம் மே-16ம் தேதியுடன் முடிவடைகிறது.   இந்நிலையில் தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் -13 ம் தேதி ஒரே கட்டமாக  வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தார்.  

தமிழகத்தில் மார்ச் 19ம் தேதிவேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்றும்,  மே-13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்தார்.

தமிழகத்தின் மொத்த வாக்குச்சாவடிகள் 54 ஆயிரம்.   தமிழகத்தில்  மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 59 லட்சம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: