செவ்வாய், 1 மார்ச், 2011

ஒரிசா எமார் மடத்தில் 90 கோடி ரூபாய் புதையல் கண்டெடுப்பு

ஒரிசாவில் பழமையான எமார் மடத்தில் பூமிக்கு அடியில் 90 கோடி ரூபாய் மதிப்புள்ள வெள்ளிக் கட்டி புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரிசா மாநிலம் புரியில் புகழ்பெற்ற ஜகன்நாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகே பழமை வாய்ந்த எமார் மடம் உள்ளது. கடந்த சில மாதங்களாக இங்கு கட்டிடப்பணிகள் நடைபெற்று வந்தன.

இதில் வேலை செய்த இருவர் டெங்கனால் எனும் நகரில் இரண்டு வெள்ளிக் கட்டிகளை விற்க முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வெள்ளிக் கட்டிகளை எமார் மடத்திலிருந்து திருடி வந்ததாக கூறினர்.

இதையடுத்து எமார் மடத்துக்கு போலீசார் விரைந்தனர். அங்கு ஒரு ரகசிய அறையில் 3 மரப்பெட்டிகளில் வெள்ளிக் கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். மொத்தம் 522 வெள்ளிக் கட்டிகள் இருந்தன. இவற்றின் மொத்த எடை 18 டன் எனவும், இதன் மதிப்பு 90 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளிக் கட்டிகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன. வெள்ளிக் கட்டிகளில் ஐக்கிய அரபு எமிரேட், ஜப்பான், சீனா, துபாய் ஆகிய நாடுகளின் முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை: