தமிழகத்தை பொறுத்தவரை இஸ்லாம் சமுதாயத்திற்கு அரசியல் எட்டாக்கனியாகவே இருந்துவருகிறது. காலம் காலமாய் நமது முன்னோர்கள் தமிழகத்திலே இருக்கக்கூடிய திராவிடகட்சிகளுக்கு அடிபணிந்தே இருந்து
வருகிறார்கள். இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு அரசியல் அறிவு இல்லாமல் இருப்பது திராவிட கட்சிகளுக்கும் தன்னை தேசிய கட்சி என்று பிரகடன படுத்திக்கொண்டு இருக்கும் சில கட்சிகளுக்கும் மிகப்பெரிய லாபமாகவே உள்ளது .தமிழகத்தை பொறுத்தவரை நம் சமுதாயம் யாரை அடையாளம் காட்டுகிறதோ அவர்கள்தான் ஆட்சி பொறுப்பில் வரமுடியும் என்பதை நமது சமுதாய மக்கள் புரியாமல் இருப்பது தான் ஏன் என்று தெரிய வில்லை? அரசியலை பார்த்து நமது சமுதாய மக்கள் பயந்து வருவதும் நமது சமுதாய மக்களை பயமுறுத்துவதுமே நாம் அரசியலுக்கு அடி எடுத்து வைக்க தயங்குவதில் ஒரு காரணம் என நான் நினைக்கிறேன் ..அதே நேரத்தில் அரசியலில் நாங்களும்
இருக்கிறோம் என்று சிறிய சிறிய குழுக்களாக குருவி கூடுகளை போன்று நமது நாட்டில் நமது சமுதாயமும் அரசியலை ஒரு வியாபாரமாக சிலர் செய்து வரும் காட்சியையும் நாம் பார்க்க முடிகிறது.நமக்கு ஏற்ற பிரதிநிதித்துவத்தை தரமறுக்கும் அரசியல் கட்சிகளை இனியும் நம்பினால் நமது சமுதாயத்திற்கு பின்னடைவே தவிர. நமக்கு வளர்ச்சி என்பது கிடையாது. இவர்களிடம்இருந்து நம்மையும் நம் சமுதாயத்தையும் இறைவனால் மட்டுமே காப்பாற்ற முடியும்.அதனால் தான் நம்மாலும் அரசியல் செய்ய முடியம் என்பதை உணர்த்த தூங்கிக்கொண்டிருக்கும் நமது சமுதாய சகோதரர்களை தட்டி எழுப்பவே நாம் இனி முனைப்போடு தேர்தல் களம் காண வேண்டும். அதற்கு முதல் படியாய் நான் அரசியல் அடி எடுத்து வைக்கிறேன். ஜனநாயக இந்தியா வை பண நாயகமாக மாற்றிய அரசியல் வாதிகளுக்கு இடையில் நாம் போராட நினைப்பது சிரமம் என்றாலும் அதை நாம் கண்டிப்பாக போராடி தான் நமது உரிமையை பெற வேண்டிய காலகட்டத்தில் இருந்து வருகிறோம் எத்தனையோ தொகுதிகளை நாம் நிர்ணயம் பண்ண முடிந்தும் நாம்
அரசியலை கண்டு ஒளிந்து கொண்டு இருப்பது இனியும் நாம் செய்யும் தவறாக
இருக்ககூடாது.அரசியலில் இருக்கும் பண முதலைகளையும், ஊழலையும் ஒழிக்க வேண்டுமானால் நாம் வீரமும் துடிப்பும் நல்ல சிந்தனையும் உள்ள இளைஞர்களை களம் இறக்குவதில் முனைப்பு காட்ட வேண்டும் .பண நாயகநாடு இல்லை இது ஜனநாயக நாடு தான் என்று சொல்லும் அளவிற்கு நாம் நமது மக்களை மாற்றவேண்டும் .இஸ்லாமியர்களும்
தலித்துகளும் ஒன்றே சேர்ந்து அரசியலில் பலத்தை காட்டினால் மேல் தட்டு மக்கள் நமது அரசியல் எழுச்சியை கண்டு அதிரும் நிலையை நாம் இன்ஷா அல்லாஹ் இந்த நாட்டிலே உருவாக்க முடியும் .நாம் அனைவரும் சகோதர பாசத்தோடு தலித்துகளையும் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களையும் ஒன்று சேர்த்து அரசியல் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க வேண்டும் இன்ஷா அல்லா .நாம் வாழும் இந்திய திருநாட்டிலே மதவெறி சக்தியை ஒடுக்க வேண்டும் .அதற்கு அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்று சேர்ந்து களம் கண்டால் தான் அதனை நாம் வென்றெடுக்க முடியும்.
சிறுபான்மை மக்களுக்கும் அரசியல் பண்ண தெரியும் என்பதை நாம் இந்த தேர்தல் களத்திலே வீரியமாக காட்ட வேண்டும் .இன்ஷா அல்லாஹ் அதன் முதல் படியாக நான் பாபநாசம் சட்டமன்ற தொகுதியை அடையாளம்
கண்டு மக்களின் ஆதரவோடு இறைவனின் துணையோடு மக்களுக்காக உழைக்க நம் சமுதாயமும் தலித் மக்களும்மற்றும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் முன்னேற்ற பாதையில் செல்ல ஒரு முறை தாங்கள் என்னை ஆதரிக்க வேண்டுமென அனைத்து தரப்பு மக்களையும் கேட்டுக்கொள்வதோடு என்னை போல் இன்னும் நிறைய சகோதரர்களை நாம் அரசியலுக்கு வரச்செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக