வெள்ளி, 11 மார்ச், 2011

ஊழல் இந்தியாவை ஊழலற்ற இந்தியாவாக மாற்ற வேண்டாமா?

ஊழலும் அராஜகமும் மலிந்து கிடக்கும் இந்திய திருநாட்டின் ஒரு பகுதியான தமிழ் நாட்டில் இன்றைக்கு ஆட்சி மாற்றத்தையும் நல்ல ஆட்சியையும் எதிர்நோக்கும் மக்களுக்கு எப்படி நல்லாச்சி அமையும் என்பதில் சந்தேகம் வரத்தொடங்கி உள்ளது .ஆண்டோர்களும் ஆளுபவர்களும் ஊழலிலும் அராஜகத்திலும் உனக்கு நானும் எனக்கு நீயும் சளைத்தவர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு போட்டி போட்டுக்கொண்டு ஒரே அளவுகோலை கொண்டுள்ளனர் .

அப்படி இருக்கும் போது எப்படி இவர்களால் நல்லாட்சியும் ஊழல் அற்ற ஜனநாயக ஆட்சியையும் ஏற்படுத்த முடியும் என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுப்பெறுகிறது.சிறுபான்மை மக்களுக்கும் தலித் மக்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலும் இவர்களின் ஆட்சியிலும் குறைந்த பாடில்லை .சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் இல்லை என்றால் யாரும் ஆட்சி ஆழ முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை .ஆனால் நம்மை ஆட்சியாளர்கள் கிள்ளுக்கீரையாகவே பயன்படுத்திக் கொள்கிறார்கள் .நம்மை ஓட்டு வங்கியாகவும் இவர்களின் சொல்லை கேட்க்கும் ஒரு அடிமையாக வும் பயன் படுத்திக்கொண்டு வருகிறார்கள் .சிறுபான்மை சமுதாயத்திலும் தலித்திலும் படித்தவர்கள் இன்றைக்கு அதிகமாகவே உள்ளனர் .அவர்களை நாம் அடையாளம் காண வேண்டும் .இந்தநாட்டில் சுடுகாடு முதல் விண்வெளி வரை இன்றைக்கு எதுவாக இருந்தாலும் ஊழலாக தான் காண முடிகிறது.
இந்த தமிழ்நாடே இன்றைக்கு போதையில் தள்ளாடுவது போல டாஸ்மாக் வருமானத்திலே தான் நாட்டின் வருமானமும் ஓடி வருகிறது .இதை போன்ற அவல நிலை இன்னும் நமது நாட்டிலே தொடர வேண்டுமா சிந்திப்பீர் செயல் படுவீர் .தூங்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களே வாருங்கள் கைகோர்ப்போம் .நாமும் இந்த நாட்டை ஆளப்பிறந்தவர்கள் தான்.நாம் வெறும் வோட்டு வங்கியாகவே இருந்து விடக்கூடாது .நமது வாக்குகளை இன்னொருவருக்கு அளித்து அவர்கள் செய்யும் சவாரிக்கு நாம் குதிரையாக இருக்க கூடாது . நாமே சவாரி செய்பவராக இருக்க வேண்டும் .இனி ஒவ்வொரு நாளும் நாம் தாமதித்தால் இந்த நாடே ஊழிலில் அடமானம் பட்டுவிடும் சூழலை நாம் தினம் தினம் பார்த்து வருகிறோம்.தூங்கியது போதும் விழித்துக்கொள்ளுங்கள் .வாருங்கள் அரசியல் களத்திற்கு காட்டுங்கள் நாம் யார் என்று அரசியல் வாதிகளுக்கு .

சிந்திப்பீர் செயல்படுவீர் !!

கருத்துகள் இல்லை: