ஞாயிறு, 6 மார்ச், 2011

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமரையும் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க முடியும்; பி.சி.சாக்கோ அறிவிப்பு

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக கேரளா காங்கிரஸ் எம்.பி. பி.சி. சாக்கோ நியமிக்கப்பட்டு உள்ளார்.திருச்சூரில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
 
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விசாரணை 1992-ம் ஆண்டில் இருந்தே நடக்கிறது. இந்த கால கட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்கும்.பிரதமர் உள்பட யாருக்கு வேண்டுமானாலும் சம்மன் அனுப்பி விசாரிக்க முடியும்.
 
பிரதமர் மன்மோகன்சிங் அவராகவே முன் வந்து பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஆஜராக தயார் என அறிவித்து உள்ளார். ஆனால் அவரிடம் விசாரணை நடத்த வேண்டுமா? என்பதை பாராளுமன்ற கூட்டுக்குழு கூடி முடிவு செய்யும்.
 
பாராளுமன்ற கூட்டுக் குழுவில் முதல் கூட்டம் இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போதே நடத்தப் படும். கூட்டுக்குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் வசதிப்படி கூட்டம் நடத் தப்படும். அப்போது யார்-யாரிடம் விசாரிப்பது என்று முடிவு செய்வோம்.
 
ஸ்பெக்ட்ரம் விசாரணை பெரும் சவால் நிறைந்ததாக இருக்கும். விசாரணையை விரைவில் முடித்து மழைக்கால கூட்டத் தொடரில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: