திமுக அமைச்சர்கள் நாளை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுக்கின்றனர் என, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறினார்.
கேபினட் மந்திரிகள்
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் தொகுதி பங்கீடு பிரச்சினையால் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக தி.மு.க. அறிவித்தது. மத்திய அரசுக்கு பிரச்சனை அடிப்படையில் இனி ஆதரவு அளிக்கும் என்றும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக அமைச்சர்கள் நாளை பிரதமரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுக்கின்றனர் என்றார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 18 எம்பிக்களைப் பெற்றுள்ள திமுக சார்பில் 6 பேர் மந்திரி சபையில் இடம் பெற்றுள்ளனர்.
1. மு.க.அழகிரி - ரசாயனம் மற்றும் உரம்
2. தயாநிதி மாறன் - ஜவுளித்துறை
ராஜாங்க மந்திரிகள்
1. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் - நிதித்துறை
2. டி.நெப்போலியன் - சமூக நீதி, அமலாக்கம்.
3. எஸ்.ஜெகத்ரட்சகன் - தகவல் ஒலிபரப்பு
4. காந்தி செல்வன் - சுகாதாரம், குடும்ப நலன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக