திங்கள், 7 மார்ச், 2011

தேசத்தின் எதிர்காலம் வகுப்பறையில் ஆரம்பம் ஆகிறது: ஜி.கே.வாசன்



மாணவர்களுக்கும், கல்லூரிக்கும் மட்டுமின்றி தேசத்தின் எதிர்காலமும் வகுப்பறையில் இருந்து ஆரம்பம் ஆகிறது என்று மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறினார்.
புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை மந்திரி ஜி.கே.வாசன்,

கல்விச்சாலைகள் வந்தால் நம் நினைவுக்கு வருவது காமராஜர் தான். 60 வருடத்திற்கு முன்பே கிராமம் தோறும் பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும் என்றார். அதில் மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வு ஏற்படக்கூடாது என் பதற்காக சீருடையை கொண்டு வந்தார். பின்னர் அவர்களுக்கு மதிய உணவு திட்டத்தையும் கொண்டு வந்தார். இது தற்போது ஆல மரம் போல் விழுது விட்டு தழைத்து பரவிகிடப்பது நமக்கு பெருமையாக உள்ளது.

மாணவர்களுக்கும், கல்லூரிக்கும் மட்டும் அல்லாமல் குடும்பம் மற்றும் தேசத்தின் எதிர்காலமும் வகுப்பறையில் இருந்து ஆரம்ப மாகிறது. எனவே கல்லூரி என்பது எதிர்காலத் தின் முக்கிய காலகட்டமாக செயல்படுகிறது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கும், கல்லூரிக்கும் விசுவாசம் உடையவர்களாக இருக்க வேண்டும். உங்கள் லட்சியம் உயர்வாக இருக்க வேண்டும்.

தற்போது உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்வி, விவசாயம், சுகாதாரம் உள்பட பல துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. 2011 12 ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் கல்விக்காக ரூ.52 ஆயிரத்து 57 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 24 சதவீதம் அதிகம்.


அனைவருக்கும் கல்வி திட்டத்திற்காக ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகமாகும். அதேபோல் 11 வது 5 ஆண்டு திட்டத்தின் கீழ் 16 புதிய மத்திய பல்கலைக்கழகம் தொடங்க ரூ.155 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 7 புதிய இந்திய மேலாண்மை கல்வி நிறுவனமும், 10 புதிய தேசிய தொழில் ஆராய்ச்சி நிறுவனமும் தொடங்கப் படவுள்ளது. கல்வி என்பது கல்லூரியுடன் முடிவு பெறுவதல்ல. இதை வாழ்க்கை முழுவதும் படித்து பயன்பெற வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: