திங்கள், 7 மார்ச், 2011

ராஜினாமா கடிதம் அளிப்பதற்காக திமுக மத்திய அமைச்சர்கள் டெல்லி சென்றனர்

ராஜினாமா கடிதம் அளிப்பதற்காக திமுக மத்திய அமைச்சர்கள் டெல்லி சென்றனர்


பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழுங்குவதற்காக திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சசர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், இணை அமைச்சர்கள் நெப்போலியன், ஜெகத் ரட்சகன் உள்ளிட்ட 4 பேர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இந்தியன் ஏர் லைன்ஸ் விமானம் மூலம் மத்திய அமைச்சசர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், இணை அமைச்சர்கள் நெப்போலியன், ஜெகத் ரட்சகன் உள்ளிட்ட 4 பேரும் புறப்பட்டுச் சென்றனர். திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு எடுத்த முடிவின்படி, தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய அவர்கள் டெல்லி சென்றுள்ளனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, கட்சி தலைமையின் முடிவின்படி பிரதமர் அவர்களை சந்தித்து, பதவி விலகல் கடிதத்தை வழங்குவதற்காக செல்ல உள்ளதாக கூறினார்.

இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய நெப்போலியன், கட்சியின் முடிவின்படி எங்களின் தலைவர் கலைஞரின் அறிவுறுத்தலின்படி, மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள 6 பேரும், பிரதமர் அவர்களை சந்தித்து எங்களுடைய ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறோம் என்றார்.
மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஏற்கனவே டெல்லியில் உள்ளார். மற்றொரு இணை அமைச்சர் காந்தி செல்வன் கோவையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றார்.


மேற்கண்ட 6 பேரும் வகித்த பதவிகள்:

கேபினட் மந்திரிகள்

1. மு.க.அழகிரி   ரசாயனம் மற்றும் உரம்
2. தயாநிதி மாறன்   ஜவுளித்துறை

ராஜாங்க மந்திரிகள்

1. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்   நிதித்துறை
2. டி.நெப்போலியன்   சமூக நீதி, அமலாக்கம்.
3. எஸ்.ஜெகத்ரட்சகன்   தகவல் ஒலிபரப்பு
4. காந்தி செல்வன்   சுகாதாரம், குடும்ப நலன்.

கருத்துகள் இல்லை: