திங்கள், 7 மார்ச், 2011

காங்கிரஸ் - அ.தி.மு.க. கூட்டணி ஏற்படுமா: பிரகாஷ் கரத் கருத்து

தி.மு.க. கூட்டணி முறிந்த நிலையில், அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைப்பதற்காக அறிகுறி எதுவும் இல்லை என மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் கரத் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி முறிந்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே இருக்கின்றன.


இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் கரத்திடம், அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்கு பதில் அளித்த அவர், கூட்டணி கட்சிகளை விட்டு விட்டு காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் நிலையில் நாங்கள் (மார்க்சிஸ்ட்) இருக்கிறோம். தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் நாங்கள் இணைந்து போட்டியிடும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம்.


தி.மு.க. விலகியுள்ள நிலையில் அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கைகோர்க்குமா என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குள் பிரச்சினை என்பது புதிதல்ல. ஏற்கனவே, மத்திய மந்திரி பதவிகளை பெறுவதிலும் இலாகா ஒதுக்கீட்டிலும் பிரச்சினை எழுந்தது. அது, அவர்கள் பிரச்சினை. விரைவில் தீர்த்து கொள்வார்கள் என கருதுகிறேன். என்ன நடக்கிறது என்பதை நீங்களை விரைவில் பாருங்கள். ஒரு கூட்டணியில் சிக்கல் என்றால் அடுத்த கூட்டணிக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை: