வியாழன், 3 மார்ச், 2011

உள்ளடி வேலைகள் துவங்கியாச்சு : கட்சிகளின் நிர்வாகிகள் கலக்கம்


உளுந்தூர்பேட்டை : வேட்பாளராக வேண்டும் என்பதற்காக, உள்ளடி வேலைகள் துவங்கியுள்ளதால், உளுந்தூர்பேட்டை சட்டசபை தொகுதியில், கட்சி நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளனர். சட்டசபை தேர்தல் ஜுரம், அரசியல் கட்சியினரை ஆட்கொள்ள துவங்கியுள்ளது. சுவர் விளம்பரத்திற்கு, அரசியல் கட்சியினர், போட்டி போட்டு, இடத்தை, "ரிசர்வ்' செய்கின்றனர். தங்களுக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, உளுந்தூர்பேட்டை தொகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க., நிர்வாகிகளே, மற்றவர்களை கவிழ்க்க, உள்ளடி வேலையில் இறங்கியுள்ளனர்.

தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலர் குமரகுரு மீது, எதிர்ப்பு கோஷ்டியினர், புகார்களை தெரிவித்துள்ளனர். இதனால் அவர், மேலிடத்தில் இருந்து, "டோஸ்' வாங்கியுள்ளார். அ.தி.மு.க.,வில் இப்படி என்றால், தி.மு.க.,வின் நிலை, வேறு மாதிரியாக உள்ளது. இந்த தொகுதிக்குள், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் ஒன்றியங்கள் இணைந்துள்ளன. ஆனால், கட்சி நிர்வாகிகள், ஒன்றிணைந்து செயல்படுவதில்லை. போட்டி போடுவதிலேயே, குறியாக உள்ளனர். மற்ற ஒன்றிய நிர்வாகிகளை, உள்ளடி வேலை செய்து கவிழ்க்க, காரணங்களை தயார் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: