லிபியாவின் ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் அரசுப்படைகளுக்கும் அரசை எதிர்ப்பவர்களுக்கும் இடையிலான யுத்தம் கடுமையாக நடைபெற்று வருகிறது. போராட்டக்குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் படைகளை மீட்பதற்காக அனைத்து வழிமுறைகளும் பின்பற்றப்படும் என கடாபி அறிவித்ததையடுத்து அரசுப்படையினர் அந்தப்பகுதிகளில் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
அஜ்தபியா மற்றும் பிரேகா நகரங்களில் சண்டை உக்கிரமாக நடைபெற்று வருவதாகவும் இதுவரை ஏறத்தாழ 20 பேர் பலியாகி இருக்கக் கூடும் என அங்கு வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இங்குள்ள பகுதிகளில் வெடிகுண்டுகளை வீசியும் அரசுப்படையினர் தாக்கி வருகின்றனர். இதுவரை இந்த நகரங்கள் போராட்டக்காரர்களின் வசமே இருந்து வருகிறது.
உலக நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் சொந்த நாட்டு மக்கள் மீது கடாபி தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். கடாபியின் நெருங்கிய நண்பரும் வெனிசுலா அதிபருமான ஹியுகோ சாவஸ் இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கு முன் வந்துள்ளார். அவருடைய சமாதானத்திட்டத்திற்கு கடாபியும் ஒப்புக் கொள்வார் எனத் தெரிகிறது. ஆனால் இந்த சமாதானத்திட்டத்தை போராட்டக்குழுவினர் ஏற்றுக் கொள்வார்களா எனத் தெரியவில்லை. அவர்கள் கடாபி நாட்டை விட்டு வெளியேறும்வரை எந்த சமாதானத்திற்கும் வர மாட்டோம் என முன்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக