வியாழன், 3 மார்ச், 2011

பயங்கரவாதி சுனில் ஜோஷியை ஆர்.எஸ்.எஸ் கொன்றது ஏன்?



"அண்மைக்காலமாக இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்கள்  வலது சாரி இந்துத்துவா அமைப்புகளே  நிகழ்த்தியது" என்று சுவாமி அசிமானந்தா என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தது தெரிந்ததே. இந்தச் சதிச் செயல்களின் மூளையாக இருந்த ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்த சுனில் ஜோஷி என்ற பயங்கரவாதியைக்  கொன்றதற்காக பெண் சாமியாரும் அபினவ் பாரத் என்கிற ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை பயங்கரவாத அமைப்பின் அமைப்பாளருமான பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் கைது செய்யப்பட்டிருந்தார்.
சுனில் ஜோஷி கைது செய்யப்படும் பட்சத்தில் அவனால் பெரும் தலைவலி ஏற்பட்டு, சில உயர்தலைகள் சிக்க நேரிடும் என்பதாலும், அவனை விட்டுவைப்பது இன்னும் பல குண்டுவெடிப்புகளை வெளிச்சப்படுத்தும்,அது நல்லதல்ல என்பதாலும் சுனில் ஜோஷி "நீக்கப்பட்டதாக" பலதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஃதன்றி,  தேவாஸ் நகர காவல் துறை,  குற்றப்பிரிவு மாஜிஸ்திரேட் பத்மேஷ் ஷா முன்பு தாக்கல் செய்துள்ள 432 பக்க குற்றப்பத்திரிக்கையில், "சுனில் ஜோஷியின் ஆணிய மனப்பான்மையினை ஒரு பெண்ணாகிய தன்னால் சகித்துக்கொள்ள இயலாததாலேயே தான் எரிச்சலடைந்ததாக" பிரக்யாசிங் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் 'சங்க'ப்  பணத்தை கையாண்ட விதமும் அவன் கொலைக்குக் காரணம் என்று தெரிவிக்கிறது.

தாகூர், ஆனந்த ராஜ் கட்டாரியா, ஹர்ஷத் சோளங்கி,  வாசுதேவ் பார்மர்,  மற்றும் ராமச்சந்திர பட்டேல் ஆகியோர் மீது குற்றப் பிரிவு 302 (கொலை ) மற்றும்  120B (குற்றச் சதி ), ஆயுதத் தடுப்புச் சட்டம்  உள்ளிட்ட பல பிரிவுகளில் குற்றம் சுமத்துகிறது அந்தக் குற்றப் பத்திரிகை.

கருத்துகள் இல்லை: