: தொகுதிப் பங்கீடு குறித்து முதல்வர் கருணாநிதியுடன், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் புதன்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்துவதற்காக ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், கே.வீ. தங்கபாலு, ஜெயக்குமார் ஆகியோரைக் கொண்ட ஐவர் குழுவை காங்கிரஸ் மேலிடம் அமைத்தது. பிப்ரவரி 20, 25 ஆகிய தேதிகளில் திமுகவுடன் காங்கிரஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை விவரங்களை பிப்ரவரி 23, மார்ச் 1 ஆகிய தேதிகளில் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் காங்கிரஸ் குழுவினர் நேரில் தெரிவித்தனர்.""கூட்டணி விஷயத்தில் குட்டக் குட்ட குனியக் கூடாது. சுதந்திரமாக திமுக முடிவெடுக்க வேண்டும்'' என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பிப்ரவரி 28-ம் தேதி வெளியிட்ட அறிக்கை திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பதை உறுதிப்படுத்தியது.சோனியாவுடனான சந்திப்புக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (மார்ச் 1) தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு, ""தொகுதி பங்கீட்டில் இழுபறி எதுவும் இல்லை. 3-வது கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும். அது குறித்து சோனியா காந்தி முடிவெடுப்பார்'' என்றார்.இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோருடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார்.தொகுதி பங்கீடு குறித்து முதல்வர் கருணாநிதியுடன் பேச்சு நடத்துவதற்காக தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் புதன்கிழமை இரவு சென்னை வந்தார்.மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து நேராக அண்ணா அறிவாலயம் வந்த அவர் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர். இரவு 9.15 முதல் 10.45 மணி வரை 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸýக்கு 65 தொகுதிகள் வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தியதாகவும், திமுக தரப்பில் 53 முதல் 55 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று உறுதியுடன் இருந்ததால் உடன்பாடு ஏற்படவில்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்த்து அண்ணா அறிவாலயத்தில் உள்ள செய்தியாளர் அறையில் நிருபர்கள் காத்திருந்தனர். ஆனால், நிருபர்களைச் சந்திக்காமல் குலாம் நபி ஆசாத்தும், தங்கபாலுவும் வேகமாக வெளியேறினர்.அவர்கள் சென்ற பிறகு கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி, பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர். அக்கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதியும், பெஸ்ட் ராமசாமியும் கையெழுத்திட்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, ""காங்கிரஸýடன் வியாழக்கிழமையும் பேச்சுவார்த்தை தொடரும்'' என்றார். கூட்டணியில் புதிய கட்சிகள் இடம் பெறுமா? என்ற கேள்விக்கு தொகுதிகள் எங்கே இருக்கிறது? என்று கேட்டார் அவர்.திமுக கூட்டணியில் இதுவரை தொகுதி பங்கீடு...பாமக----------------------------------31விடுதலைச் சிறுத்தைகள் கட்சி----------10கொங்குநாடு முன்னேற்றக் கழகம்---------7இந்திய யூனியன் முஸ்லிம் லீக்------------3மூவேந்தர் முன்னேற்றக் கழகம்------------1மொத்தம்-------------------------------52
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக