ஞாயிறு, 6 மார்ச், 2011

தேடப்படும் குற்றவாளியாக ஹசன் அலி அறிவிப்பு

ரூ.40 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியுள்ள புனே தொழிலதிபர் ஹசன் அலியை தேடப்படும் குற்றவாளியாக அமலாக்கப் பிரிவு அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேயை சேர்ந்தவர் தொழிலதிபர் ஹசன் அலிகான். இவர் வெளிநாட்டு வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும், ரூ.40 ஆயிரம் கோடி வருமான வரி செலுத்த ஹசன் அலிகானுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டது. ஆனால், அவர் வரி செலுத்தவில்லை.

இது தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், ஹசன் அலி ஆஜராகாமல் வெளிநாடு தப்ப வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, ஹசன் அலியை தேடப்படும் குற்றவாளியாக அமலாக்கப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த தகவல் நாடு முழுவதும் போலீஸ், குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால், ஹசன் அலி வெளிநாடு தப்ப முடியாது என்று அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை: